நீதியரசர் எஸ். மோகன்
நிஜமான சாதனையாளர்கள், பெரும் ஆளுமைகள் பலருடன் ஒரு நாள், ஒரு கணமேனும் பார்த்துப் பழக வாய்க்கப் பெற்ற பெருவாழ்வு எனது 😊 .
ராஜீவ் படுகொலையின் போது அன்று இரவே அந்தக் கொலைப்பழி திமுக மீது போடப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் வன்முறைக்கான
அவர் மகன் யுவர் ஆனர்.,
அதெல்லாம் வேணாம். சார்னே கூப்பிடு.
சரிங்க சார்.
என்ன படிச்சிருக்கீங்க?
பி. ஈ சார்.,
இப்போ லீவா?
முடிச்சுட்டேன் சார்., இப்போ கம்பனியை நான் தான் பார்த்துகிறேன்.
வெரிகுட்.., சரி! உங்களோட க்ளெய்ம் எவ்வளவு?
நஷ்ட ஈடு தம்பி? அதை நீங்க குறிப்பிடவே இல்லையே!
அது நீங்க எவ்வளவு தந்தாலும் சரி சார்., (நான் நஷ்ட ஈடு எதிர்பார்த்தே போகலை. போலீஸ் கண் முன்னமே நடந்த வன்முறை என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுத்தால் சாட்சி சொல்லலாம்னு என போயிருந்தேன்!)
பஸ் முழுக்க எரிஞ்சுடுச்சுப்
ஆமாம் சார்.,
ஆமாம்! புது பஸ் இப்போ என்ன விலையாகும்?
9 லட்ச ருபாய் ஆகும் சார்!
இன்சுரன்ஸ்லே எவ்வளவு தந்தாங்க?
3.5 லட்ச ரூபாய் சார்.,
சரி! நான் அதிகம் தர முடியாது. என்கிட்டே அரசு கொடுத்திருக்கும் பணத்துலே நான் பெட்டிக்கடை, சலூன்
நீங்க எவ்வளவு தந்தாலும் சரி சார்! இந்த 6 வருஷத்துலே இப்படி யாரும் கூப்பிட்டு ஆறுதல் கூட சொல்லலை சார். இதுவே பெரிசு என்றேன்.
புன்னகைத்தபடியே, I herebt grant 1.5 lakhs as a compensation to this gentleman
நான் திகைச்சுப் போய் நின்றிருந்தேன்! ஐம்பதாயிரம் தந்திருந்தாலும் அரசிடம் இருந்து நஷ்ட ஈடை எதிர்பார்த்திராத எனக்கு அது போனஸ்தான்!
அடுத்து நீதியரசர் சொன்ன வாக்கியம்தான் இந்த திரெட் எழுத எனக்கு தூண்டுதல்.,
உன்னோட அம்மா இதை எப்படி எடுத்துகிட்டாங்க?
இப்படி அவங்க பேர்லே இருந்த பஸ் முழுக்க கொளுத்தப்பட்டதே! அதை?
ஷாக் ஆனாங்க! ஆனா, அழுதாங்களான்னு தெரியலை. நான் நேர்லே பார்த்தப்போ அழுதுட்டேன் சார்.,
நிச்சயமா அழுதுருப்பாங்க. பெண்களுக்குதான் உழைப்பின் அருமை அதிகம் தெரியும்.,
நான் அமைதியாக நின்றிருந்தேன்! இப்படியான
உங்க தொழிலுக்குப் பாதுகாப்புத் தர வேண்டிய அரசாங்கம் அதை செய்ய தவறிடுச்சு. அதுக்காக இந்த மோகன் ரொம்ப வருத்தம் தேரிவிச்சேன்னு உன் அம்மாவிடம் போய் சொல்லு! என்றார்.
நண்பர்களே! நிதிமன்றமும், நீதியரசர்களும் இப்போது இருக்கும் நிலையோடு ஒப்பிட்டுப்
இன்னுமொரு பின்னூட்டம் : ஒரே வாரத்தில் காசோலை வந்தது. அத எடுத்துக் கொண்டு நன்றி சொல்ல முதல்வர் கலைஞரைப் பார்க்கச் சென்றேன்.
இல்லைண்ணா இதுவே அதிகம்., ஆனா ஜட்ஜ் கடைசியில் இப்படி நடந்ததுக்கு வருத்தம் தெரிவிச்சார்ணா, அதான் அதிர்ச்சி என்றேன்.
ஒரு கணம் திகைத்தவர்
பார்த்தியா? எதுக்கு மோகன் என இப்போ புரியுதா? இதற்குத்தான் திராவிட வித்துகள் தேவைப்படுகிறது.
சில கணங்கள் அந்த அறை அப்படியே உறைந்திருந்தது.
எனது தலைவரின் மனம் கவர்ந்த மாமனிதர் திராவிடப் பாரம்பரியத்தின் வேர் நீதியரசருக்கு அஞ்சலி. 🙏