“டயர் சக்கரம், எலுமிச்சை பழம் மற்றும் ஹிந்து மதம்”.
சக்கரம் கண்டு பிடிச்ச காலத்துலேயே எலுமிச்சைபழம் இருந்திருக்கும்! ஹிந்து மதம் (எந்த மதமும்!) இருந்திருக்குமான்னு தெரியலை! ஆனா, சக்கரம் நகரும் முன் அதனடியில்
எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நான் எங்க லாரி, பஸ்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்ஃபாக்ட் சின்ன வயதில் எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை டயர்களுக்கு அடியில்
விவேக் படத்தில் “ஏண்டா! உள்ளே இருக்கும் ஒம்பதாயிரம் பார்ட்ஸ்லே ஓடாத வண்டியா இந்த ஒத்தை எலுமிச்சம்பழத்துலே ஓடப்போகுது?”என கேட்டபோது
ஜஸ்ட் முந்தா நாள் ஆயுதபூஜையின் போது கூட எங்க கம்பெனியில் சில கூடை எலுமிச்சைகள் நசுக்கப்பட்டன. எங்களோட முஸ்லீம் டிரைவர்கள் கூட தத்தமது லாரிகளுக்கு பூஜை
வடக்கத்திய சங்கிகள் இதில் உட்புகுந்து குழப்பியடிக்கும்வரை அது ஒரு சடங்கு. அவ்வளவுதான். அதை ஹிந்துமதச் சடங்கு என சமூகவலையில் சில பல சங்கிகள் உரிமை கொண்டாடும்போது சிரிச்சுட்டு கடந்து போக வேண்டியதா இருக்கு.
அடுத்த வருஷம் இந்தியாவுக்கு வரப்போகும் விமானத்துக்கு, இப்பவே ஃப்ரான்ஸ் போய் எலுமிச்சை நசுக்க வேண்டிய அவசியம் என்னன்னு
தனிநபர் மதச்சடங்கு செய்வதும், அரசே முன்னே நின்று ஒரு மதத்தோட சடங்குகளை செய்யறதும் ஒன்றான்னு சிலபேர் கத்துவாங்க! குறிப்பா தமிழ்நாட்டுலே இந்தச் சத்தம் அதிகமாவே கேட்கும். அது அவங்க குத்தமில்லை! அப்படி அவங்களை சில பெருசுங்க தயார் பண்ணிட்டுப் போயிருக்குங்க.
ஆனா, இந்தியா ஹிந்து நாடா மாறினப்புறம், நிம்மதியா உங்க விருப்பத்துக்கு எத்தனை எலுமிச்சை, தேங்காயும்
அப்படி அரசு முறைப்படி பூஜை போடணும்னு முடிவானால்,
கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஐயரை வரவழைச்சா, பார்த்தசாரதி கோவிலிருந்து பட்டரையும் வரவழைச்சாகணும்.
கூடவே எங்க பாடிகார்டு முனீஸ்வரன் பூசாரி தட்டை எடுத்துட்டு வந்து
ரஃபேலுக்கு நீங்க ஒரு பக்கம் சர்க்கரை பொங்கல் வைங்க!
இன்னொரு பக்கம் மலையனூர் அங்காளம்மன் கோவில் பூசாரி கருவாட்டுக் கொழம்பு வைக்கட்டும். எதிரில் பாண்டிக் கோவில் கெடா வெட்டும், பின் பக்கமா
பூஜை முடிஞ்சு யாருக்கு என்ன விருப்பமோ அந்தந்தப் பிரசாதத்தை அவங்கங்க சாப்பிட்டு கிடட்டும். அதுலே யாரும் தலையிடக்கூடாது. சரியா?
இந்தியா ஒரு ஹிந்து நாடானால்(!), இப்படி ஒவ்வொரு ஹிந்துவின் உணர்வுகளுக்கும்,
போர் வந்தால் வெல்வோம்.
அதுவரை போரடிச்சா, நம்ம விமானத்தை நாமே சுட்டுக் கொள்வோம்.👍
ஜெய் ஹிந்த்.