My Authors
Read all threads
Living funeral: Confronting Mortality & What to Do When I'm Gone
👇👇
வாழும் ஊரில் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவருக்கு Heart Attack வந்து நினைவற்ற நிலைக்கு சென்றுவிட்டார்.வீட்டில் அனைவரும் இருக்கும்போதே ஒரு அறையில் இவர் மயங்கி விழுந்துள்ளது,
1/
மற்ற அறையில் உள்ள குடும்பத்தினருக்கு தாமதாக தெரிய வந்ததால், மூளைக்கான் இரத்தம் அதிக நேரம் தடைப்பட்டு, நினைவிழந்து விட்டார். Coma after heart attack is common.

Heart Attack நடந்தவுடன் எவ்வளவு விரைவாக மருத்துவ உதவி கொடுக்கப்படுகிறது என்பதையொட்டி, பல விளைவுகள் ஏற்படலாம்.

2/
மூளையின் நினைவிழத்தல், உடலின் ஒரு பகுதி செயலிழத்தல் என்று எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இயக்குநர் பதவி , நல்ல சம்பளம், பொதுவாழ்வில் அதிக நண்பர்கள், விளையாட்டு என்று இருந்த அவருக்கே 40 களின் கடைசியில் வந்த இந்த விபத்து, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

3/
நாம் இறப்பு குறித்து பேச பயப்படுகிறோம். தினந்தோறும் இறப்பு குறித்த செய்திகள் பல வந்தாலும், விபத்துகள், இயற்கை அழிவுகள் என்று பல செய்திகளைக் கேட்டாலும், தாய், தந்தையை இழந்திருந்தாலும், நாமும் இறக்கப்போகிறோம் என்பதை நினைப்பதில்லை.

4/
அல்லது, நினைத்தாலும் அது குறித்து வெளிப்படையாக பேசுவது இல்லை. வாழ்வது குறித்த சித்தாந்தங்கள், விளக்க உரைகள், மதங்கள், சடங்குகள் நிறைய உள்ளது. ஆனால், முன் அறிவிப்பே இல்லாமல் வரும் இற‌ப்பிற்கு நாம் தயாராக இருக்கிறோமோ? இருக்க வேண்டும். இறப்பு இயல்பானது.

5/
கணவன், மனைவி, குழந்தைகள் என்ற ஒரு குடும்பத்தில் , கணவனின் இறப்பு ஒரு மாதிரியாகவும், மனைவியின் இறப்பு வேறுமாதிரியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும். விபத்துக்களின்போது பெற்றோர்கள் இருவரும் இறந்துவிட , குழந்தைகள் தனித்துவிடப்படும் சோகங்களும் உண்டு.

6/
பிறந்தநாள் கொண்டாடுவதுபோல, வருடத்தில் ஒருமுறையாவது இறப்பு குறித்து குடும்பத்தினருடன் பேசிக்கொள்ள வேண்டும். இப்படிப் பேசுவது பணம், சொத்து, காப்பீடு, என்று பலவற்றை திட்டமிட உதவும்.

அமெரிக்காவில் பள்ளிகள், அலுவலகங்களில் Fire drill உண்டு.

7/
எதிர்பாராத தீ விபத்தின்போது என்ன செய்யவேண்டும் என்ற பயிற்சி. இதை வருடம் ஒருமுறையாவது செய்துவிடுவார்கள். இப்படிச் செய்வதால் உண்மையான தீ விபத்தின் போது, குழப்பம் இல்லாமல் சரியான வழியில் தப்பிக்க, எப்படி உதவிக்கு அழைப்பது என்பவை எளிதாக இருக்கும்.

8/
Living funeral
-------------
அமெரிக்காவில் திருமணத்திற்கு ஒத்திகை உண்டு. திருமண நாளில் என்ன செய்யவேண்டும், எப்படி ? யார் எங்கு இருக்க வேண்டும், என்று திட்டமிடவும் சரியாக நடக்கவும், Wedding Rehearsal இருக்கும். இது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

9/
ஆனால், Living Funeral என்ற ஒன்று தெரியுமா? அவ்வளவாக பின்பற்றப்படுவதில்லை என்றாலும், இது குறித்த பேச்சுகள் இங்கு உண்டு. மருத்துவ காரணங்களால் இறப்பிற்கான தேதி குறிக்கப்பட்டவர்கள், தங்களின் இறப்பிற்கு முன்னரே, உறவுகளை, நண்பர்களை வரவழைத்து அளவளாவ ஒரு வாய்ப்பு.

10/
ஒருவர் இறந்தபின், நீங்கள் வருவது என்பது ஒரு சடங்கு. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், தேதி குறிக்கப்பட்டு இறப்பிற்காக காத்து இருக்கும் ஒருவரை, அவரின் இறப்பிற்கு முன்பு வந்து பார்த்துச் செல்வது ஒரு இறுதிவிடை. பொருள் வாய்ந்தது.

11/
மதத்தை நம்புபவர்கள், இறந்தபின்பு ஏதோ கிடைக்கப்போகிறது என்று எண்ணி, நிகழ்காலத்தை சடங்குகளிலும், சிலைகள்,கட்டிடங்கள், கார்ட்டூன்களிடம் அனுசரணையாக இருந்து புண்ணியம் சேர்க்கிறேன் என்று ஏதோ செய்கிறார்கள். ஒரு அறிவியலாளனாக, எனது இறப்பைக் குறித்து எனக்கு தெளிவான பார்வையுண்டு.

12/
Everyone is marching towards their graveyard. We just don't know the route. The journey towards that makes living interesting.

13/
அமெரிக்காவில் வாழ்பவர்கள்:
------------------
(1). Advance Healthcare Directive aka Living Will

இதை எழுதிவிடுங்கள். ஏதாவது விபத்துகளில் நீங்கள் மீளமுடியாத Coma போன்ற நிலைக்குச் சென்றுவிட்டால், என்ன செய்யவேண்டும்? என்பது போன்ற தெளிவான உங்களின் ஆசை ஒரு ஆவணமாக இருப்பதால்,

14/
இது உங்கள் குடும்பத்தினருக்கு சுமையைக் குறைக்கும்.
எடுத்துக்காட்டாக‌ மாதக்கணக்கில் உங்களை Coma நிலையில் வைத்து பராமரிப்பது என்பது குடும்பத்தினருக்கும் சுமை. எந்த முடிவும் எடுக்க முடியாமல் ,

Life support எடுத்துவிடுவதா இல்லையா?
எப்போது எடுப்பது?

15/
எடுத்தால் உறவுகள், நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?

என்ற குற்றவுணர்வில் அவர்களை தள்ளுவது முறையல்ல. Living will take the burden and guilt from loved ones

(2). அலுவலத்தில் காப்பீடு இருந்தாலும்,தனியாக‌ Term life insurance எடுத்துவிடுங்கள். காப்பீடை முதலீடாக நினைக்காதீர்கள்.

16/
(3). Will and testament
பெற்றோர் இருவரும் விபத்தில் இறக்க நேர்ந்தால், குழந்தைகள் மாநில அரசின் பராமரிப்புக்கு போய்விடுவார்கள். இதை தவிர்க்க , நீங்கள் உங்களின் குழந்தைகளை யாரின் பராமரிப்பில் விட வேண்டும் என்று எழுதிவிடலாம். Will and testament எழுதிவிடுங்கள்.

17/
(4). What to Do When I'm Gone

NRI (Non-resident Indian) & FIC (Former Indian Citizen) களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், கணவனே அனைத்து பண பரிமாற்றங்கள், வங்கி, முதலீடுகளைச் செய்வது. மனைவி வேலைக்கு போனாலும், நிதி மேற்பார்வை கணவனாக இருக்கும்.

18/
திடீரென்று கணவன் இறந்துவிட்டால், மனைவிக்கு வங்கி கணக்கு விவரங்கள் தெரியாமல் நிறைய நடைமுறைச் சிக்கல்கள்.

What to Do When I'm Gone என்ற ஒரு தகவல் அறிக்கையை எழுதி வைத்துவிடுங்கள். இதில் அலுவலகத்தில் உங்கள் மேலாளர் பெயர், தொலைபேசி எண், உங்களின் அலுவலக நண்பர்களின்

19/
தொலைபேசி எண்கள் இருப்பது அவசியம்.

(5). குழந்தைகளிடம் பேசுங்கள்.
இறப்பை திட்டமிட முடியாது. ஆனால் இறப்பிற்கான ஒத்திகை தவறல்ல.

20/
(6). நண்பர்களிடம் பேச வேண்டியது.

எதிர்பாராத விபத்துகளில் நீங்கள் Coma போன்ற நிலைக்கு போய்விட்டால், உங்களின் குடும்பத்தினரிடம் என்ன முடிவு எடுக்கச் சொல்லியுள்ளீர்களோ அதை நண்பர்களிடம், குடும்பத்தினர் முன்னிலையில் தெரிவித்துவிடுங்கள். அப்படிச் செய்யத் தவறினால்,

21/
மனைவி உங்கள் விருப்பப்படியே life support ஐ எடுக்க அனுமதி அளிக்கும்போது, " பாரு இவ ஒரு மாதத்துக்குள்ள புருசனை கைவிடுறா" என்று பேச வாய்ப்புள்ளது. Don't do that to your loved ones.
*
இந்த படம் YouTube ல் கிடைக்கிறது அவசிம் பாருங்கள்.
Tuesdays With Morrie
youtube.com/watch?v=gGCYD_…

22/
இந்தியாவில் வாழ்பவர்கள்:
---------------
மேலே சொன்னவற்றில் இந்தியாவில் என்ன நடைமுறைகளோ அதைச் செய்யுங்கள். குழந்தைகளிடம் அவசியம்பேசுங்கள். Middle school is a right age in my view but its your call.

23/
எனக்கு ஏதாவது ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று என் மனைவி குழந்தைகளிடம் பல முறை பேசியுள்ளேன். மாதமொருமுறையாவது இது தொடர்பாக பேச்சு இருக்கும்.

நாளை என் வீட்டில் நடக்கும் 2020 கொண்டாட்டத்தில் என் நண்பர்கள் முன்னிலையில் எனது இறப்பு/ மருத்துவ சிக்கல்களில்
24/
என் குடும்பம் எடுக்கும் முடிவுகளுக்கு உதவியாக இருக்குமாறு பேச உள்ளேன்.

**
இணையத் தோழர்கள்:
-------------
என்றாவது நான் இல்லை என்ற செய்தி கேட்டால், இணையத் தோழர்கள் ஒரு கோப்பை மதுவையோ, ஒரு கோப்பை காஃபியையோ அருந்தி Cheers சொல்லி விடைகொடுங்கள். வருந்த ஒன்றும் இல்லை.

25/25
Blog Post

Living funeral: Confronting Mortality & What to Do When I'm Gone
kalvetu.blogspot.com/2019/12/living…
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with கல்வெட்டு

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!