தமிழ்நாடு: கொரோனா பாதிப்பால் அவசர உதவி தேவை (bed, o2 bed, ventilator bed) எனில் முதல்லில் செய்யவேண்டியது இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். ucc.uhcitp.in/publicbedreque…
இதில் முக்கியமாக தேவைப்படும் தகவல் நோயாளியின் பெயர், விலாசம், கொரோனா பரிசோதனை முடிவு, ct scan செய்திருந்தால் அதன் முடிவு, saturation level எவ்ளோ இருக்கு, உறவினர் பெயர் மற்றும் தொலைபேசி எண் எல்லாம் கொடுத்தால் போதும். பின்னர் பதிவு செய்தப்பின் பதிவு எண் எங்காவது குறித்து வைக்கவும்.
எடுத்துக்காட்டு 10720 இது போல இருக்கும். இந்த எண்ணை வைத்துத்தான் அரசு/அவசர உதவிக்கு உதவியை நாட முடியும். இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்ய செய்யதெரியாதவர்களுக்கு 104/1077 அழைத்து உதவி கேக்கலாம். நீங்களே பூர்த்தி செய்திருந்தால் அந்த எண்ணை கொடுத்தால் போதும் அவர்களே பெட் கிடைத்தவுடன்
உங்கள் எண்ணுக்கு அழைப்பர். ஒரு வேளை பாதிக்கபட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் வந்தால்/ரொம்ப முடியவில்லை என்றால் கீழ்காணும் படத்தில் குறிப்பிட்டது போல படுக்கவைத்து அருகில் உள்ள எல்லா மருத்துவமனைக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏதேனும் ஒரு இடத்தில் உதவி கிட்டும்.
டுவிட்டர் மூலம் உதவி எனில் இந்த hashtag மூலமாக உதவிகள் பெறலாம். @104_GoTN@NeetMeet
அருகில் உள்ள பொது சுகாதார நிலையங்கள்/ மாநகராட்சி போன்ற இடங்களிலும் இந்த சேவை உண்டு. மனம் தளராமல் எல்லா பக்கமும் உதவிகளை பெறவும். ஏதோ ஒரு மூலையில் உங்களுக்கு உதவி கிடைக்கும். வாழ்த்துக்கள் 🙏🙌👍
கொரோனா காரணமாக பெட் வசதி தேவை என்பவர்கள் இவர்கள் மூலமாகவும் பயன் பெறலாம். கீழே கொடுத்த லிங்க் மூலம் நோயாளியின் தகவல் எல்லாம் கொடுத்தால் உதவிகள் கிடைக்கலாம். முயன்று பாருங்கள்! @COVIDuthalai
தோழர்களே வெற்றிகரமாக 2 வருடம் கழித்து இந்தியா வந்தாச்சு. கும்பலா சுத்துவோம் 2 மாசத்துக்கு இந்தியால இருந்து செயல்படும். இந்தியா வந்த கதையை சிரிப்பு கலந்து பார்ப்போம்.(Thread) #Sweden#gumbalasuthuvom#tamilyoutuber
முதல் நாள்: தொடர்ந்து பனிப்பொழிவு இருப்பதால் இந்தியா பக்கம் போலாமா இல்ல இங்கேயே இருந்து கஷ்டபடவானு ஒரு நல்ல சீட்டா போது ராசா 😂😂😂
சரி இந்தியா பக்கமே போலம் என்று முடிவு செஞ்சு covid rules பற்றி பார்க்கலாம் என்று முடிவு செஞ்சா இவ்ளோ பெரிய rules சொன்னாங்க...
#Thread#Covid19#TrueStory நெருங்கிய நண்பரின் தந்தை கொரோனவால் இறந்துவிட்டார். ஒரு வாரமாக காய்ச்சல், சளி என்று இருந்தும் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளார். மூச்சு விடவே ரொம்ப சிரமம் ஆனா பின்தான் மருத்துவமனை சென்று பார்த்தார். (1/10)
வெள்ளிக்கிழமை பார்த்துவிட்டு கொரோனா பரிசோதனைக்கு கொடுத்துத்துவிட்டு திங்கள் வருமாறு கூறியுள்ளனர் (மருத்துவமனையில்). ஞாயிறு அன்றே ரொம்ப முடியாமல் போனதால் உடனே அனுமதிக்கப்பட்டார் (அரசு மருத்துவமனையில்). (2/10)
திங்கள் காலை கொரோனா தொற்று உறுதி செய்தபின் பார்த்தால் நுரையீரலில் 85% கொரோனா தொற்று பரவி விட்டதாம். காப்பாற்ற கொஞ்சம் கஷ்டம் என்று சொல்லி வெண்டிலேட்டர் மூலம் காப்பாற்ற முயலும் முன்பே வலியில் இறந்துள்ளார். (3/10)
ஒரு சில ஐரோப்பா நாடுகள் போல ஸ்வீடெனிலும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக செய்தி. ஸ்டோக்ஹோல்ம் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகரிப்பதாகவும் வெளியில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உஷாரு அய்யா உஷாரு! #coronavirus
கொரோனா முடிந்துவிட்டது என்று நினைக்காமல் விழித்திரு என்ற தொனியில் மருத்துவ துறை சார்ந்த வல்லுனர் கூறியுள்ளார். இந்த தொற்று முடிவடைய பல காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.