பாக்கெட் மேல் 45ரூபாய் போட்டுள்ளது. கடைக்காரர் பில் தராமல் 50 ரூபாய் கேட்கிறார். நாம் தருவோமா? மாட்டோம். சண்டை போடுவோம். பில் கேட்போம். வேறு கடைக்கு சென்று 45க்கு வாங்குவோம். அந்த கடைக்காரரின் அட்டூழியத்தை நாலு பேருக்கு சொல்லி அங்கு ஏமாறாமல் தடுப்போம். 2/அ
அதே சமயம், அதிக பட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பது குற்றமும் கூட. Legal metrology act 2009 படி முதல் தவறுக்கு அபராதமாக 25,000ஆகவும் இரண்டாவது தவறக்கு 50,000 ஆகவும் மூன்றாவது தவறுக்கு ஒரு லட்சம் அபராதமும் ஓராண்டு சிறையும் விதிக்கப்படும்.
நிற்க. 3/அ
டாஸ்மாக் வலைதளத்தில் 2016-17க்கான ஆண்டறிக்கையின் படி அவர்களின் வருட விற்பனை 31,243.57 கோடி.
15/3/2021 தேதிப்படி குறைந்த சரக்கின் அதிக பட்ட சில்லறை விலை 120 ரூபாய்.
இதற்கு 5 ரூபாய் கூடுதலாக வைத்தால் நுகர்வோரின் கூடுதல் சுமை 4.17%
10 ரூபாய் கூடுதலாக வைத்தால் 8.33%
4/அ
பாட்டிலுக்கு குறைந்தது 5ரூபாய் கூடுதலாக வைத்தால் ஆண்டுக்கு நடக்கும் கொள்ளை 31,243.57 × 4.17% = 1,302.85 கோடி
சில ஆயிரம் கோடி இதில் புழங்குவது நிச்சயம்.
இவ்வளவு பணம் மதுக்கடையில் மக்களை ஏமாற்றி கறுப்புப் பணமாக புரள்கிறது. இதில் யார் யாருக்கு பங்கு என டாஸ்மாக்கிற்கே வெளிச்சம்
5/அ
தினம் சுமார் 300 ரூபாய் கூலி பெறும் ஒருவனிடம் மாதம் சில நூறு ரூபாயை டாஸ்மாக் கொள்ளை அடிப்பதை அரசு தடுக்க வேண்டாமா?
நான் இங்கு பேசுவது டாஸ்மாக் பாரில் அமர்ந்து கொண்டு அதன் சேவையைப் பெற்று பிறகு டிப்ஸ் தருவதை பற்றி அல்ல.
டாஸ்மாக் விற்பனை கவுன்டரில் நடக்கும் கொள்ளை பற்றியது 6/அ
மளிகை கடையில் ஒரு பொருள் கூடுதல் விலைக்கு விற்றால் நாம் வேறு கடையில் சென்று வாங்கலாம். ஆனால் மது இங்கே டாஸ்மாக்கில் மட்டுமே விற்பனையாகிறது.
சென்னை டாஸ்மாக் எலைட்டில் நான் கேள்வி கேட்டதற்கு அவர்களின் பதில்:
1. டேமேஜ் பாட்டிலுக்கு ஈடு கட்ட வேண்டும்
2. அன் லோடிங் சார்ஜஸ்
7/அ
3. தின கூலிக்கு கூடுதல் ஆட்களை தனியாக வைத்துள்ளோம். அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும்.
4. கடைசியாக சொன்னது. இங்க இப்படி தான். இஷ்டம் இல்லாயெனில் வர வேண்டாம்.
அதிக பட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு எந்த பொருளையும் விற்க எங்கும் எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை.
8/அ
விதிவிலக்காக உணவகங்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலுக்கு இது பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அங்கு சேவையும் (service with product) இருப்பதாக தீர்ப்பு கூறுகிறது
முதல்வர் @mkstalin அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த தவறை உடனே தடுத்து நிறுத்துங்கள்
9/அ
ஏழைகளை சுரண்ட அனுமதிக்காதீர்கள்.
தான் சுரண்டப்படுவது தெரியாமலேயே ஏழை வாழ்கிறான்.
விடியலுக்கான அரசு இதுவெனில் நிச்சயம் செவி சாய்க்கும் என நம்புகிறேன்
பரஸ்பரநிதியில் (mutual funds) ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் முதலீடு செய்வதே systematic investment plan (SIP)
ஏன் sip?
சிறு, குறு முதலீட்டாளருக்கு ஏற்றது
சந்தையின் ஏற்ற இறக்கங்களை தாங்கும் /~
மாதாமாதம் சேமிக்கும் பழக்கத்தை உறுதிபடுத்தும்
சந்தையின் போக்கை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டாம்.
எப்படி முதலீடு செய்வது?
1. வங்கியின் மொபைல் ஆப் / நெட் பேங்கிங் 2. நேரடியாக பரஸ்பர நிதியிடம்
இதற்கு உங்கள் kyc (know your customer) மிக முக்கியம். /~
ஏன் kyc?
சுருக்கமாக சொன்னால், உங்களை யார் என அடையாளப்படுத்தவும், சட்டவிரோத பரிவர்த்தனையை தடுக்க kyc பயன்படுகிறது. இதற்கு உங்கள் ஆதார் எண், பான் அட்டை முதலியவை தேவைப்படும்.
வங்கியில் கணக்கு இருந்தால் ஏற்கனவே உங்கள் KYC சரிபார்க்கப்பட்டு இருக்கும்.
1. Fund based - பணமாக தருவது 2. Non-fund based - உத்திரவாதமாக தருவது
Fund based:
இது மேலும் இருவகைப்படும்
1. Cash credit / Overdraft 2. Term loan
CC / OD: இது உங்கள் தொழிலின் அன்றாட தேவைகளை (working capital) பூர்த்தி செய்ய
வழங்கப்படும். உங்கள் முதலீடானது ஸ்டாக், வர வேண்டிய கடன் (விற்பனைக்கு பிறகு) போன்றவையால் முடங்கி இருக்கும். அதிலிருந்து உங்கள் வியாபாரத்தை சரிவின்றி நடத்த CC / OD பயன்படும். பொதுவாக உங்கள் ஆண்டு டர்னோவரில் 20% ஆக லிமிட் இருக்கும். இதை வைத்து மூலப்பொருள் வாங்க, சம்பளம் கொடுக்க,
மின்கட்டணம், அரசு வரிகள் கட்ட, மூலப்பொருள் வாங்கிய கடன் அடைக்க போன்ற செலவுகளுக்கு பயன்படுத்தலாம். இதை வைத்து எந்தவித சொத்தும் (நிலம், கட்டிடம், இயந்திரம்) வாங்கக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் working capital கடுமையான பாதிப்புக்கு ஆளாகி தொழில் முடங்கலாம். இதை running limit என்று
குறிப்பு: இந்த பதிவு ஒரு புரிதலுக்கு மட்டுமே. யாரும் இதன் மீது எந்தவித உரிமையும் கோர முடியாது.
தகவல்களை வேறு தளங்களில் உங்கள் திருப்திக்கு சரி பார்க்கவும்.
தனிநபர் மருத்துவ காப்பீடு பற்றி அறிய வேண்டிய தகவல்கள்.
(இதை அரசுக் காப்பீடு திட்டத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்)
Sum assured (SI) உங்கள் காப்பீட்டு தொகையை குறிக்கும்.
1.உங்கள் SI 5லட்சம் என வைத்துக் கொள்வோம். நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகு பில் 3 லட்சம் என வைத்துக் கொள்வோம். அத்தனையும் உங்களுக்கு க்ளைம் வராது. பொதுவாக ஒரு நாள் ரூம் வாடகை SIயில் 1%, ஒரு நாள் ICU பெட் சார்ஜ் 2%
கடந்த சனி அன்று இரவு 8 மணிக்கு ஒரு நல்லவர் எனது காரின் பின்புற பம்பரை சிதைக்க, நான் 100ஐ அழைக்க, ஏட்டைய்யா திருப்பி என்னை அழைத்தார். சம்பவத்தை விவரித்தேன். யாருக்கும் எந்தவித காயம் இல்லை. எனவே spot photo எடுத்து விட்டு கிளம்புங்கள்.
நாளை மாலை 3 மணிக்கு ஸ்டேஷன் வாருங்கள் என கூறினார்.
நெல்லையில் ஆய்வாளராக இருக்கும் நண்பரை அழைத்து process சரியா என cross check செய்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினேன்
ஞாயிறு மாலை மீண்டும் ஏட்டைய்யாவை அழைத்தேன். திங்கள் காலை 11 மணிக்கு வரச் சொன்னார்.
10.45க்கே சென்றேன். மனு, RC, Licence, Insurance etc கையில். கொடுத்து விட்டு காத்திருந்தேன். யாருக்கும் உட்கார இடம் இல்லை. என்னைப்போல ஒரு பத்து பேர். பெரும்பாலும் கூட 2/3 பேர். நானும் இன்னொருவரும் மட்டுமே தனியாக இருந்தோம். 30 நிமிடம் கழித்து வந்து வேலை குடும்ப விபரங்களை கேட்டார்.
உங்களிடன் குறிப்பிட்ட அளவு சேமிப்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்தால் வட்டி குறைவாகவே கிட்டும். டெபாசிட் போட்டால் அவசரத்திற்கு உடைக்க முடியாது. முதிர்வுக்கு முன்பு எடுத்தால் சில சமயம் penalty வரும்.
என்ன செய்யலாம்?
Flexi-deposit கணக்கை துவங்கி அதில் வையுங்கள். குறிப்பிட்ட இருப்பிற்கு மேல் (எ.கா. ௹10,000) டெபாசிட்டாக மாறி விடும். வட்டியும் சேமிப்புகணக்கு விட அதிகம் கிடைக்கும். 24×7 உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
புதிய தலைமுறை தனியார் வங்கிகள் (Axis, Hdfc, Icici) இந்த வசதியை வழங்குகிறது.
இந்த வசதி ஒரு சில பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளது. உங்கள் கணக்கு இருக்கும் கிளையை அணுகுங்கள் 🙂