அதனால, என்னை விட்டுட்டு கருத்தை மட்டும் பாருங்க
அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை வருஷம் முடிஞ்சுடுச்சு, ஆனா
பாலம் வேலை, சாலை வேலை எல்லாம் நல்லா தான் நடக்குது. என்ன மக்கள் தேவைக்காக இல்லே, அவங்க தேவைக்கு நடக்குது
மேற்கொண்டு என்ன நடக்குது?
பொங்கல்க்கு காசு கொடுக்கிறாங்க,
தேர்தல்க்கு முன்னாடி மக்கள் நலப்பணின்னு அடித்தட்டு மக்களுக்கு பக்கெட் உட்பட வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் கொடுத்தாங்க,
2000₹ தர்றோம்ன்னு சொல்லிட்டு இருக்காங்க
அப்புறம் புதுசு புதுசா பஸ் விடறாங்க, எலெக்ட்ரிக் பஸ் விடப்போறதா சொல்றாங்க
அப்போ தேனாறும் பாலாறும் ஓடுதுன்னு சொல்றீங்களா
அப்போ 39 தொகுதியும் ஜெயலலிதா அம்மா ஜெய்ச்ச மாதிரி அள்ளிட்டு வந்திருக்கனுமே
ஒண்ணுமே பண்ணாம, துண்டு சீட்ல வாழ்க்கை ஒட்ற ஸ்டாலின்க்கு எப்படி ஓட்டு
அவர் உளறலுக்கு வேற மாநிலமா இருந்தா டெபாசிட் கூட கிடைக்காது
காரணம்? ரெண்டே ரெண்டு விஷயம் தான்
1. ஊடகங்களின் பாஜக எதிர்ப்பு கோஷம்
2. அதிமுக அரசின் ஊழல் மற்றும் கையாலாகத்தனம் தான்
நீங்க யாரை வேணா கேளுங்க, ஏன் பாஜகவ பிடிக்காதுன்னு?
அதிமுக ஊழல் ஆட்சியை நாம தான்
எந்தளவு உண்மை?
நாம திமுக ஆட்சிக்கு வந்து நாட்டை துண்டாட, கொள்ளையடிக்க கூடாதுன்னு நினைக்கிறோம்
ஆனா அது நம்மோட வீக்னெஸ்ன்னு அதிமுக நோகாம நோம்பி கும்பிடுது
பால் விலை ஏற்றம் எல்லாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் உள்ளாட்சி நிர்வாகம்ன்னு ஒன்னு
திமுக நீதிமன்றத்தில போய் தேர்தலை தள்ளி வெச்சது என்னமோ உண்மை. ஆனா அதையே காரணம் ஆக்கி, இன்னைக்கு கிட்டதட்ட மூணு வருஷமா தேர்தல் நடத்தாம இருக்காங்களே, அது தப்பு இல்லேங்களா?
நீதிமன்றம் சுட்டிகாட்டிய ஒரு தேவை முழுமையாகலேன்னு
2019 மக்களவை தேர்தல் முடிஞ்சு ஒரே வாரத்தில், எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு, இன்னும் வாக்காளர் பட்டியல் ரெடியாகலன்னு முழு பூசணிக்காய் மறைக்கறாங்களே, மக்கள் என்ன அவ்வளவு கேனையா
ஆனா அவங்க நடவடிக்கை பார்த்தா அப்படி தான் தோணுது
சரி அதனால என்ன? எல்லா வேலையும் சரியா தானே நடக்குதுன்னு சொல்ல வறீங்களா
மனசாட்சி தொட்டு சொல்லுங்க, உங்க ஏரியால
எங்க ஏரியாக்கு ஒரு வருஷம் முன்னே, எஸ்பி வேலுமணி ஒரு திறப்பு விழாவுக்கு வர்றாருன்னு ஓரு வாரமா ஊரே அமர்க்களமா இருந்திச்சு
அப்புறமும், அதே மாதிரியா இருக்கு?
நாம எல்லாம் #SwachhBharat மோடியின் வெற்றின்னு சொல்றோம்
மூணு தடவ கம்பெளைண்ட் பண்ணியும், மூணாவது தடவ அவர்களாகவே அது சரிசெய்யப்பட்டதுன்னு தீர்ப்பு எழுதினது எல்லாம் வரலாறு.
குப்பை அள்ள காசு, சாக்கடை சுத்தம் செய்ய காசுன்னு அதிகாரிகள் திளைக்கிறாங்க.
அதிகாரிகள் கையில் ஆட்சி
மக்கள் பிரதநிதிகள் இருந்தா முறையிடவாவது வழி இருக்கும். ஆனா இப்போ? #SwachhBharat எல்லாம் நம்ம ஊருக்கு இல்லே, நாம எல்லாம் வெளிநாட்டில இருக்கோம்ன்னு மனசை தேத்திக்கிட்டு போக வேண்டியது தான்
சரி அது மட்டுமா?
கோவைல சொத்து வரி உயர்வு
கஅறிவிக்கப்பட்டபடி கிட்டத்தட்ட 50 சதவிகித வரி உயர்த்தி இருக்கங்கலாம். அதாவது 2500₹ இருந்த வரி 3750 ஆயிருக்கனும்
ஆனா வரி செலுத்த போனா, 5000 கேட்கறாங்க, அது மட்டுமில்லாம
இது எல்லாம் அநியாயம் தானே
மாநகராட்சி இருந்திருந்தா மக்கள் மன்றத்தில இதை சட்டமாக்க விவாதம் பண்ணிருப்பாங்க
மக்கள் பிரதிநிதிகள் எப்படி நாளைக்கு மக்களை சந்திக்கிறதுன்னு ஆட்சேபனை பண்ணி, ஓரளவு குறைவா உயர்த்தி
யார் எக்கேடு கெட்டா என்ன, நாம நம்ம வழியில போவோம்ன்னு ஆட்சியாளர்கள் இருக்காங்க
இன்னொன்று சூயஸ், தண்ணீர் விநியோகம் தனியார் கிட்ட குடுக்க போறோம்ன்னு சொல்லிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்காங்க
ஒருபக்கம் முழு விளம்பரம் நாங்க எந்த
மக்கள்க்கு தான் புரியல. இது என்ன சிஸ்டம்ன்னு
ஆனா மனம்போன போக்கிலே, செஞ்சா ஒருவித பயம் தானே பரவும்
மக்கள் கேக்கற ஒரே கேள்வி என்னன்னா?
இதெல்லாம் யாருக்கு பண்றங்க, யாரை கேட்டு பண்றங்கன்னு
மக்கள் கிட்ட கேளுங்க ஆட்சியாளர்களே
மக்கள் ஓட்டு போட்டது
அதிமுக ஆட்சி பாஜக ஆதரவு ஆட்சின்னு நினைச்சா நாம தான் முட்டாளுக
@kalyanbjmm ஒரு வெற்று புகார் மூலமா கைது பண்ணினவங்க, ஹிந்துக்கள்க்கு எதிரா பதிவிட்ட
பாஜக அரசு கொண்டு வர்ற நிறைய திட்டங்கள் தமிழகத்திலே முன்னெடுக்க விட மாட்டாங்க
உதாரணமா, #AyushmanBharat எங்காவது நடைமுறையில இருந்தா காட்டுங்களேன்
அரசு மருத்துவமனையில விசாரிச்சா முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் தான் இருக்குன்னு சொல்றாங்க
அதுவும்
பேர் என்னவோ இருக்கட்டும், ஆனா மக்களுக்கு பலன் கிடைச்சா சரி
ஆனா அவங்களும்
கிரைண்டர்க்கு GST வரி குறைஞ்சிருக்குன்னு உற்பத்தியாளர்கள் கிட்ட சொல்லி விளக்கறது கூட இல்லே மாநில அரசு
எங்கே போராட்டம் நடந்தாலும் அதுல நமக்கு பங்கில்லைன்னு கண்டுக்காம பாஜககிட்ட பந்தை தள்ளி விட்டுட்டு தேமேன்னு நிக்கிறாங்க
சொல்ல வர்ற கருத்தை அம்மா மாதிரி ஆணிதரமா சொல்லாம, பட்டும்படாம போறது எல்லாம் தப்புங்க
பாஜக மேல ஒருக்கிற ஒரே வருத்தமே, அதிமுக என்ன பண்ணினாலும்
சொத்துவரி பெரிய விஷயமா எப்போ நடந்தாலும் உள்ளாட்சி தேர்தல்ல எதிரொலிக்கும். இதை போன்ற மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுங்க, இல்லேன்னா திமுகக்கு லாட்டரி தான்.
நாம ஆளுங்கட்சில இருந்து விலகி இருப்பது நல்லது
அவங்க இருந்த வரைக்கும் அதிமுக கோட்டைன்னு சொன்ன கொங்கு மண்டலம் திமுக கம்யூனிஸ்ட் கைக்கு போவது உறுதி, மக்களவை தேர்தல் முடிவே இதற்கு சாட்சி
தகுதியான ஒரு தலைவர் அதிமுக வழிநடத்தலென்ன
இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு, அதுக்குள்ள முழிச்சுக்க பாருங்க
இதுவரைக்கும் அதிமுகக்கே ஓட்டு போட்ட என்னை போன்றோர் வார்த்தையையும் கொஞ்சம் கேளுங்க