இந்த படத்தில் நீங்கள் காண்பது கடலின் நடுவே இருக்கும் ஏதோ ஒரு ஹெலிபேட் இல்லை.
இது ஒரு நாடு. உலகிலேயே மிகச்சிறிய நாடு.
ஒன்று கூட இல்லை.
ஒரு நாட்டை நாடு என்று ஏற்றுக்கொள்ள மற்ற உலக நாடுகளின் அங்கீகாரம் தேவை.
இல்லை என்றே சொல்லவேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாடாவது சீலாந்தை நாடு என்று அங்கீகரிக்கும்போது அதைத் தனி நாடு என்று ஏற்றுக்கொள்ளலாம்.
செய்தித்தாள்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கைலாசா தென்னமெரிக்காவில் ஏகுவடோர் நாட்டுத் தீவில் அமைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள்
எனவே கைலாசா ஒரு தனி நாடு இல்லை. இன்னும் அவர்களே அதிகாரப்பூர்வமாக கைலாஸாவை ஒரு நாடு என்று அறிவிக்கவில்லை (சீலாந்து போல). முதலில் அவர்கள் அவ்வாறு அறிவிக்கவேண்டும். பின்பு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதுவரை கைலாஸாவில் குடியுரிமை வாங்க நினைப்பவர்கள் சற்றே பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
துணுக்குச் செய்தி: சீலன்ட் நாடு "Sir" பட்டம் கொடுக்கிறது . $146.99 மட்டுமே. நீங்களும் 'சர் மாமன்னர்
ஆகலாம்