திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇
அதற்கு, #அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்_ஆகனும்
பெண்களுக்கு அர்ச்சகர் பணியில் முன்னுரிமை அளிக்கனும். ஆம் ஆலயப்பணி பெண்கள் கைகளில் தானே இருந்தது!!! அவர்களிடமிருந்து, ஆலயங்களை எப்படி கைப்பற்றியது பார்ப்பனியம் என்பதை அறிந்து கொண்டாலே, அவர்களின் சதி மொத்தமும் புலப்பட்டுவிடுமே!!!👇
அந்தச் சதி தான், தமிழ் இலக்கியத்தால் பெருங்கொடையாளர்கள் என்று போற்றப்பட்ட தேவரடியார்களை தேவடியாளாக்கி ஆலயங்களை விட்டு வெளியே வீசி எறிய வைத்தது. அரச📸👇 குலத்தில் இருந்தே பலரும் #தேவரடியார் பணி செய்திருக்கிறார்கள், அப்படியிருக்க எப்படி அது வேசித் தொழிலாக்கப்பட்டது!?👇
ஆண் எளிதில் காமவயப்படக் கூடியவன், ஆகையால் ஆலயப்பணி பெண்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது இம்மண்ணில். அப்பெண்கள், ஆலயப்பணி தவிர்த்து இசை நாட்டியம் உள்ளிட்ட கலைகளை உருவாக்கி வளர்க்கவும் செய்திருக்கிறார்கள். சான்றுகள் ஏராளமாக உள்ளது இவற்றுக்கெல்லாம், இருந்தும் இந்த இழிநிலை ஏன்👇
#தேவரடியார் பரத்தையாக்கப்பட்ட பொழுது, அவர்களது நாட்டியம் பரத்தை நாட்டியமாக்கப்பட்டு, பார்ப்பனியம் கைப்பற்றியவுடன் புனிதமடைந்து பரதநாட்டியம் ஆகிவிட்டது எப்படி!? இப்பொழுதும் அதன் நட்டுவனார்கள் தேவரடியார்களின் வழிவகையினர் தான். கோயிலையும் கலைகளையும் திட்டமிட்டுக் கைப்பற்றியதெப்படி👇
வேந்தர்களும் தேவரடியார்களும் துறவிகளாக, இறைவன் இறைவியாக வைத்துப் போற்றப்பட்டு வந்த இம்மண்ணில், அவர்களது துறுவு கெடுத்தது தான் ஆரியத்தின் முதல் சூழ்ச்சியே. அதுதொட்டு மன்னராட்சியையும் கெடுத்து, தேவரடியார் பணியையும் கெடுத்து, அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டது பார்ப்பனியம்👇
துறவு காத்த வேந்தர்கள், துறவு காக்கும் தேவரடியாரைப் புணர்ந்தால் உலகையே வெல்லலாம் என்று மதிமயக்கப்பட்டார்கள், விளைவு, அரண்மனைகளில் அந்தப்புரம் உருவானது, வேந்தர்களைத் தொடர்ந்து அதிகாரம் படைத்தோரின் சந்தைமடம் ஆகியது தேவரடியாரின் இல்லங்கள். தமிழ்க்குடியின் சிறப்பு சீரழிந்தது👇
துறவு காத்த வேந்தர்களுக்கும் தேவரடியார்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கே பொட்டுக்கட்டிப் பார்த்தது இந்தச் சமூகம், பார்ப்பனிய சூழ்ச்சியால். அவர்களது ஆண் குழந்தைகள் என்ன செய்தார்கள்!? அவர்கள் அறிவிற் சிறந்தவர்களாகிக் கலை வளர்த்தனர். தமிழிசை வளர்த்த மூவரும், தேவரடியாரின் வாரிசுகள்👇
தமிழிசை என்ன ஆனது!? அதனையும் பார்ப்பனியம் விழுங்கிக் கொண்டது. தமிழர் நாட்டியம், தமிழிசையொடு நமது உரிமைகளையும் பறித்துக் கொண்டது பார்ப்பனியம். அதனை எல்லாம் மீட்டு, பெண்ணுரிமையை மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டாமா!? அதற்கு ஒரே வழி பார்ப்பனியத்தை ஆலயங்களை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்
தேவரடியார் வேறு தேவதாசிகள் வேறு என்று ஒத்தக்கால் டான்ஸ் ஆடுவானுக தமிழ்தேசியம் பேசுறவனுக. தேவடியாங்கிற வார்த்தைக்குத் தமிழில் பொருள் தேடிட்டு வாங்கடான்னு விரட்டியடிக்கனும். தமிழில் தேவரடியார்கள் தான் வட மொழியில் #தேவதாசிகள், அவர்களும் பார்ப்பனியத்தால் சீரழிக்கப்பட்டவர்களே👇
யார் இந்தப் பார்ப்பனர்கள்!? தமிழர் ஆதித் தத்துவங்களில் ஒன்றான சார்வாகம்(உலகாயதம்) எனும் இறை மறுப்புப் பொருள்முதல்வாதத் தத்துவத்தைக் கற்க வந்து, அத்தனையையும் சிதைத்து சைவத்தையும் போட்டியாக வைணவத்தையும் உருவாக்கி, இந்தப் பகுத்தறிவுச் சமூகத்தை மூடநம்பிக்கைக்குள் தள்ளியவர்கள் தான்👇
கவிஞர் #வைரமுத்து ஆண்டாளை தேவதாசி என்ற பொழுது பொங்கியவன் எல்லாம் யாரு!? தெய்வத் தொண்டு செய்து வந்த தேவரடியார் எனும் தேவதாசிகளை தேவடியாள் ஆக்கிப் பொட்டுக்கட்டி விட்ட பார்ப்பானுக தான். இது தான் டா வரலாறு, வரலாறச் சொன்னா மிரட்டுவீங்கன்னா, நாங்க சொல்வதோடு ஓய மாட்டோம், செயல்படுவோம்👇
ஆகம விதி, பெண் தீட்டு என்றெல்லாம் வழக்காடும் ஆரியம், அதற்குரிய தரவுகளைத் திரட்டி, ஆணித்தரமாக வழக்காடிப் பெற்றே ஆக வேண்டும் இந்த உரிமையை. பெண்ணின் தூமை தீட்டு எனில், இவ்வுலகே, இவ்வுலகு உயிர்கள் அனைத்துமே தீட்டு தான் பார்ப்பனியம் உட்பட. இவற்றை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்👇
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால் சாதி எப்படி ஒழியும்!? பெண்களுக்கு அதிலே முன்னுரிமைஅளிப்பதால் சமூகத்துக்கு என்ன பயன்!? இவை எல்லாம் அவ்வளவு எளிதா!? எளிதல்ல தான், ஏன் எளிதல்ல என்று சிந்தித்தாலே அதன் விளைவுகள் ஆதிக்கத்தைத் தகர்க்கக்கூடியதாக இருப்பதை நாம் உணர முடியும்👇
அச்சமே ஆண்டவன் எனும் மாயத் தோற்றமானது, மாயமே மந்திரம் தோன்றக் காரணம் ஆனது, மந்திரமே அதனைக் கையாள்பவனின் அதிகாரமானது, அந்த அதிகாரமே ஆண்டவன் எனும் மாயத் தோற்றத்திற்கு அஞ்சியவனை மந்திரம் ஓதுபவனின் கைப்பாவையாக்கியது!!!
அதனால் தான் #பெரியார் கடவுளை மறுக்கச் சொன்னார்👇
#அண்ணா ஆரியத்தின் மாயையை உடைக்கப் புறப்பட்டார்
#கலைஞர் ஆரியத்தையே அப்புறப்படுத்தத் திட்டம் வகுத்து சட்டமும் வகுத்தார்
#தளபதி திட்டவட்டமாக இதனைச் செயல்படுத்தினால் போதும். கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆரியமே இன்று அதிலே மறைமுக இடஒதுக்கீடு கேட்டுப் போர் தொடுக்கிறது👇
அதுபோல், கருவறைக்குள்ளும் இடஒதுக்கீடு கேட்டுப் போர் தொடுக்கும் ஆரியம், அப்படி ஒரு நிலை கண்டிப்பாக உருவாகனும். அதுவரை இடையறாது முயற்சித்து, இத்திட்டத்தை நிறைவேற்றனும். அப்படிச் செய்து விட்டால், ஆரியமே சாதியையும், இறை மூடநம்பிக்கைகளையும் மறுக்கும் நிலையை உருவாக்கும். எதனால்!?👇
ஆரியத்தின் அதிகாரமற்ற இடத்தை, வலிமையற்ற இடமாக்குவது ஆரிய இயல்பதனால்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்"
அனைத்து சாதியினரும் பெண்களும் அர்ச்சகர் ஆவதை உறுதி செய்யுங்கள் @mkstalin முதல்வர் அவர்களே, அன்றே திமுக உண்மையாக வெல்லும் நாளாகும் என்பது உறுதி💪🔥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SOMASUNDARA PRABHU M

SOMASUNDARA PRABHU M Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @praboo_mass

23 Nov 19
#சிறுநீரகக்_கல்
#பித்தப்பைக்_கல்
#சிறுநீர்க்குழாய்த்_தொற்று

இவற்றிலிருந்து
#ஒரே_நாளில்
#ஒரே_மருந்தில் தீர்வு

இந்தக் கற்கள் குறிப்பிட்ட உணவுமுறையால் வருகின்றது என்பதை விட, சரியான சிறுநீர்க் கழிவு வெளியேற்றம் இல்லாததால் ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
என்ன செய்யனும்!?👇
சரியாக சிறுநீர்க் கழிவை நாம் வெளியேற்றாத போது, சிறுநீரில் இருக்கும் தாது உப்புக்கள் உள்ளேயே படிவதாலும், சிறுநீரின் அளவு குறுகி அமிலத்தன்மை அதிகமாவதாலும், கற்கள் உருவாகின்றன. முறையாக அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு, இந்த கற்களும் வராது, சிறுநீரகத் தொற்றுக் கிருமிகளும் வராது👇
அனைத்துக் கிருமிகளையும், கொன்று வெளியேற்றுவதில்லை நம் உடல்.
ஆம், சிறுநீரகத் தொற்றுக்குக் காரணம், வெளியே இருந்து பரவும் கிருமிகள் அல்ல. நமக்குள் நம்மால் அடக்கி வைக்கப்பட்ட சிறுநீரில் இருக்கும் கிருமிகள் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்வதால் ஏற்படுவது என்பதை யாரும் உணர்வதில்லை👇
Read 6 tweets
4 Nov 19
இறைவனையும், வேதங்களையும், அது சார்ந்த மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து வாழ்ந்த இனம் தமிழினம் என்பதையும், #திருவள்ளுவர் தந்த குறள்களின் பொருளைச் சிதைத்துத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறோம் என்பதையும், அக்கால நடைமுறைகளை அலசி ஆராய்ந்து உணரலாம்.
#BJPInsultsThiruvalluvar
👇
சாவகர் அருகர் அமணர் ஆசீவகர் தாபதர்
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர்.
#அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும்,
#ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும்.
#BJPInsultsThiruvalluvar 👇
இதிலே குறிப்பாக, ஆசீவகம் தான் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த, முதல் #கடவுள்_மறுப்புக் கொள்கையாக நம்பப்படுகிறது.
இது குறித்த நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இதன் #இறைமறுப்பு நிலைப்பாடு குறித்து, பல தொல்பொருளியல் நூல்களில் குறிப்புகள் உள்ளன
#BJPInsultsThiruvalluvar 👇
Read 13 tweets
23 Oct 19
#அல்சர் எனும் இரைப்பைப் புண், வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. கவனிக்காது விட்டால், இரைப்பைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இவற்றை எப்படி இயற்கையாக, எளிமையான முறையில், உடனடியாக #குணமாக்கலாம் என்று பார்க்கலாம்👇
இந்த வயிற்றுப் புண், அமிலத்தன்மை/கொழுப்பு மிகுந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, பித்தப்பையில் இருந்து, அதிக அளவில் வெளிவரும் பித்த நீரால்(அமிலத்தன்மை மிகுந்தது) ஏற்படுவது. இந்தப் புண், குணமாகாது நீடிப்பதற்குக் காரணம், ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியா(நுண்ணுயிரி)👇
இந்த இரைப்பைப் புண் வராது/ மீண்டும் வராது காக்க, இதனைக் கண்டிப்பாக அறிந்திருத்தல் அவசியம்.

அமிலத்தன்மை உடைய உணவுகளை, காரத்தன்மை சேர்த்து சமன் செய்து (குற்றம் நீக்கி) உண்பது நலம்.

உதாரணமாக, எலுமிச்சையுடன் உப்போ இஞ்சியோ சேர்த்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.👇
Read 6 tweets
5 Oct 19
#கற்பனைக்குள்_மெய்யியல்பு
அறிவியல் உண்மைகளையும், முற்றுப் பெறாத அல்லது பெற முடியாத உண்மைக்கு அருகாமையில் உள்ள கற்பனைகளையும் கொண்டு இயங்குவது.
ஆன்மீகம் நேரெதிர், இதிலே அனைத்துமே கற்பனை தான்.
விளையாட்டே இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் கற்பனைக்குள் புகுந்து தான்.
Fa(ith)ct👇
எந்தக் கற்பனையை ஆய்வுக்கு உட்படுத்தலாம், எதைக் கூடாது!? இருக்கலாம் என்பது அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை, மற்றவை புறந்தள்ள வேண்டியவை.
கற்பனைக்கு எல்லை இல்லாத காரணத்தால் அது இரண்டு திசைகளிலும் பயணிக்கும்.
Logic/ possibility matters
எதற்கு வாய்ப்புள்ளது என்று உணர்வது பகுத்தறிவு👇
அறிவியலால் முற்றுப் பெற முடியாதது சில உண்டு, அதிலே குறிப்பாக மூளையும் அண்டமும், தேடத் தேடத் தொடரும் புதிர்கள்.
#மூளை மனிதனுக்குள் இயங்கும் போது நடப்பது எதுவும், ஆய்வுக்கூடத்தில் வைத்து இயக்கும் போது தெரியாது. அதுவும் மூளைக்குள் நடப்பது எல்லாமே வேதியியல் மாற்றங்கள்👇
Read 25 tweets
13 Aug 19
#ரஜினி
இவரைப் பெரிதாகக் கடிந்து கொள்ள ஏதுமில்லை...
சாதாரண மனிதனின் மனம் எப்படி மாறிக் கொண்டே இருக்குமோ அப்படி மாறிக் கொண்டே இருக்கும் மனம் தான் இவருடையதும். இவர் இதற்குச் சரிப்பட்டு வருவார் என்று நம்பும் மக்களும் சாதாரண மக்கள் தான். அவர்கள் மீதும் குற்றமில்லை. எது தான் குற்றம்?👇
இவர் வந்து எதையாவது மாற்றுவார் என்ற ரசிகர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒரு புறம், இவர் அரசியலில் வளர்ந்தால் நாமும் வளரலாம் என்ற ஆசை மறு புறம். இதற்குத் தலைவனான ரஜினி எப்பொழுதோ செவி மடுத்திருக்க வேண்டும், அவருக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை, ஆசையோடு தயக்கமும் இருந்தது ரஜினிக்கு👇
ஆன்மிகப் பயணங்கள் வாயிலாகக் கூட தனக்கு இதிலெல்லாம் பற்றில்லை என்று மறைமுகமாகச் சொல்லியும், இவர்கள் ஏங்கியே முதுமையடைந்தனர். ஒரு சிலரே எரிச்சலடைந்து பாதையை மாற்றிக் கொண்டனர் எனினும், பெரும்பாலான ரசிகர்கள் இன்று வரை இவருடைய அரசியல் எழுச்சியைக் காணவே, கனவுகளோடு காத்திருக்கின்றனர்👇
Read 20 tweets
30 Jul 19
#உணவுப்பழக்கம்
சர்க்கரை வியாதி, இருதய அடைப்பு முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் அடிப்படை, தவறான உணவுப்பழக்கம் தான்.

எப்படி நம் உணவுப்பழக்கத்தை அமைத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம்?

எல்லோரும் சொல்வது தானே என்று எண்ண வேண்டாம், அதற்குரிய விளக்கங்களையும் நீங்கள் இங்கே காணலாம்👇
நோய் எனப்படுவது யாதெனின், உடல் உள்ளமைப்பு முறைமையில் கேடோ, பெரும் மாற்றமோ ஏற்படுவது தானே! அப்படி ஆவது ஏன்!? அவை இயங்கத் தேவையானதை வழங்காததும், இயக்கத்தைத் தடை செய்வதை வழங்குவதும் தானே. சுருங்கச் சொல்வதானால், நல்லது விடுத்து அல்லதுக்கு அந்த நாவே அடிமையானது தான் முதன்மைக் காரணம்👇
"அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு"

எவ்விதமான ஆற்றல் குறைகின்றதோ, அதனை வழங்கும் உணவை அதன் அளவறிந்து உண்பதுவே நீண்டு வாழவைக்கும் வழியாகும்.

சற்று கடிமானதாகத் தோன்றலாம். எது தீர்ந்தது, எது தேவை என்று எப்படி அறிந்து கொள்வது என்னும் குழப்பம் வரும்👇
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!