“சபரிமலைக் காட்டில் மாதவிடாய் கொண்ட பெண் சென்றால் ரத்தவாடை கொண்டு புலி வேட்டையாடும்” என்று ஒரு சங்கியால் மட்டுமே சிந்திக்கக்கூடிய (வக்கிரம் + மிரட்டல்) ட்வீட் கண்ணில் பட்டது.
இது புலி எனும் ஓர் உயர்குண ஜீவனின் கவுரவப் பிரச்சனை.
எல்லா காட்டு விலங்குகளைப் போல புலியும் மிகுந்த மோப்பசக்தி கொண்டது. யானைக்கு நிகரான மோப்ப சக்தி என்பார்கள். ஆனால், பலரும் நம்புவதைப் போல அந்த மோப்பகுணம் வேட்டையாட அல்ல! தனது எல்லைகளை வகுக்க, தனக்கான துணையை தேட..
சரி! புலி எப்போது, எப்படி, யாரை வேட்டையாடும்?
மனிதனைப் போலன்றி புலி பசித்தால் மட்டுமே வேட்டையாடும்.
புலியின் மிக முக்கியமான சொத்து பற்கள். அதிலும் முன்னிரண்டு மேற்பற்கள்.
இதெல்லாம் மேன்மக்கள் குணம்.
மனிதன் புலிக்கான உணவே அல்ல! காரணம் மனிதன் புலியை விட உயரமானவன். இரு கைகளையும் வீசக்கூடியவன். கையில் எப்போதும் ஆயுதமோ, வலுவான பொருளோ வைத்திருப்பவன். எனவே, மோதலில் அதன் பல் அடிபட்டு உடையக்கூடிய சாத்தியம் மிக அதிகம். எனவே புலியின் விருப்ப
காட்டில் ஒரு ஆட்கொல்லிப் புலி
ஆக, அன்பின் சங்கிகளே! உங்கள் ஆகமங்களைக் காக்க, ஆதிக்கத்தை நிலைநிறுத்த, நீங்கள் தேர்ந்து கற்றறிந்த வழக்கமான அரசியல் சூழ்ச்சிகளையே கையாளுங்கள். அவை நிச்சயம் உதவும். பாவம் காட்டுப்புலிகள். மக்களின் கடவுள் ஐயப்பனின் வாகனம் வேறு! அவைகளின் மீது பழி போடாதீர்கள்.🙏