மீதேன் திட்டம் Coal Bed Methane (CBM)
மீதேன் (CH4) CNG/ LNG யாக வாகனங்களில், சாண எரிவாக வீடுகளில், தொழிற்சாலைகளில், மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. மீதேன் இரண்டு வகைப்படும்.
Thermogenic Methane: நிலக்கரி, கச்சா எண்ணெய் உருவாகும் போது தோன்றுகிறது
Biogenic Methane: குப்பை, சாணம் போன்ற கரிம கழிவுகள் (Bacterial action) மக்குவதால் தோன்றுகிறது.
மீதேன் எரியக்கூடிய, நச்சு தன்மையற்ற வாயு. மீதேன் புவியை வெப்பமடைய செய்யும் வாயு (green house gas). மாசு படுத்துவதில் ஒரு பங்கு மீதேன்=25 பங்கு கரிமில CO2 வாயுக்கு சமம். மீதேன் எரியும் போது அது CO2 ஆக மாறுகிறது. காற்றிமாசு SOx & NOx தவிர்க்கப்படுகிறது. எனவே மீதேன் greener energy
நிலக்கரி உருவாகும் போது தோன்றும் மீதேனை சுற்றுபுரச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் பயன்படுத்தலாம் அதை பற்றிய பதிவு.
தாவரங்கள் நிலத்தில் புதையும் போது பாக்டீரியா, வெப்பம் & அழுத்தம் காரணமாக நிலக்கரியாக மாறுகிறது.
தாவரம் நிலக்கரியாக மாறுவதில் பல படி நிலைகள் உள்ளது. தாவரம் ->பீட்->லிக்னைட்->sub-bituminous,->Bituminous->ஆந்திரசைட்->கிராபைட்.
நிலத்தில் புதைந்த தாவரம் பீட் -> லிக்னைட் நிலையை அடையும் போது biogenic methane உருவாகும்
லிக்னைட் -> பிட்டுமினஸ் நிலகரியாக மாறும் போது Thermogenic methane உருவாகும்
தாவரம் நிலக்கரியாக மாறும் போது வெளியாகும் நீர் & மீதேன் நிலக்கரியில் இரண்டு விதமாக சேமிக்கப்படுகிறது
1.நிலக்கரியில் உள்ள natural fractures (Cleats) யில் மீதேன் & நீர் சேமிக்கப்படும்
2.நிலக்கரியின் பரப்பில் adsorption முறையில் மீதேன் சேமிக்கப்படும்.
ஒரு டன் நிலக்கரியில் சுமார் 20 m3 (20 ஆயிரம் லிட்டர்)அளவுக்கு மீதேன் சேமிக்கப்படுகிறது. சுரங்கம் தோண்டி நிலக்கரி எடுக்கும் போது சேமிக்கப்பட்ட மீதேன் வெளியாகி விபத்து ஏற்படும்.
மீதேனால் ஏற்படும் உயிர் பலியை தவிர்க்க USGS (United states Geological Survey) & GRI (Gas Research Institute) கண்டுபிடித்த தொழில் நுட்பம் கோல் பெட் மீதேன்.
நிலக்கரி சுரங்கங்களை தோண்ட ஆரம்பிப்பதற்கு முன் ஆழ்துளை கிணறுகள் மூலம் மீதேனை அகற்ற வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் மீதேன் மின்சார உற்பத்தி, CNG, LNG etc பயன் படுத்தப்படுகிறது.
மீதேனை நிலக்கரியில் இருந்து நீக்கியபின் சுரங்கம் தோண்டுவதால் உயிர் பலிகள் தடுக்கப்படுகிறது. மேலும் மீதேன் வாயு மண்டலத்தில் நேரடியாக கலப்பதால் ஏற்படும் புவி வெப்பமாதலை தடுக்கப்படுகிறது.
அமெரிக்காவில் நிலக்கரி சுரங்கங்களை பாதுகாப்பாக தோண்ட கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பம் கோல் பெட் மீதேன் (CBM).
இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கம் தோண்டும் முறை யை இந்த இழையில் படிக்கவும்:
CBM திட்டம்:
நிலக்கரி மயிலாடுதுறை-நன்னிலம் வரை நிலத்தின் அடியில் சுமார் 1500 - 3000 அடி ஆழத்தில் புதைந்து உள்ளதால் சுரங்கம் தோண்டி எடுக்க முடியாது. நிலக்கரியில் எவ்வளவு மீதேன் உள்ளது & உற்பத்தி செய்ய இயலுமா என கண்டறிய் GEECL நிறுவனம் மத்திய அரசின் DGH உடன் ஒப்பந்தம் போட்டது.
நம்மாழ்வார் &கோ மீதேன் எடுத்த பின் நிலக்கரி எடுப்பார்கள். காவேரி டெல்டா பாலைவனமாகும் என தவறான தகவலை பரப்பி போராட்டம் நடத்தினார்கள். இந்தியாவில் செயல்படுத்தும் CBM யின் நோக்கம் அதிக ஆழத்தில் புதைந்துள்ள, சுரங்கம் தோண்டி எடுக்க முடியாத நிலக்கரியில் இருந்து மீதேன் எடுப்பது மட்டுமே
நம்மாழ்வார் & கோ மீதேன் எடுக்கும் போது நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றார்கள். நிலக்கரியில் உள்ள நீருக்கும் நிலத்தடி நீருக்கும் தொடர்பு கிடையாது. அவ்வாறு தொடர்பு இருந்தாதால் மீதேனை உற்பத்தி செய்ய முடியாது.
நம்மாழ்வார் & கோ hydro frac பற்றி தவறான தகவல்களை பரப்பியது. நிலக்கரியில் இயற்கையாகவே fractures (butt & face cleats) இருக்கிறது. Hydro frac செய்து நிலக்கரியை பிளவு படுத்த அவசியம் இல்லை.
Hydro frac ஏற்கனவே நிலக்கரியில் உள்ள fractures (cleats) யை திறந்த நிலையில் வைக்க செய்யப்படுகிறது. திறந்த நிலையில் இருக்கும் fractures வழியாக மீதேன் ஆழ்துளை கிணறுகளை வந்தடையும்.
தாமோதர் ஆறு பாயும் ஜார்கண்ட் & வங்காளத்தில் மீதேன் உற்பத்திசெய்யப்படுகிறது. நம்மாழ்வார் சொன்ன மாதிரி விவசாயம் அழிந்திவிடவில்லை. மீதேன் உற்பத்தியின் போது அதன் கூட வரும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். நிலத்தடி நீர் பாதிக்கவில்லை.
நம்மாழ்வார் பத்து அடிக்கு ஒரு ஆழ் துளை கிணறு தோண்டி மீதேன் எடுப்பார்கள் விவசாயம் பண்ண நிலம் இருக்காது என்று சொன்னார். மீதேன் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதை உற்பத்தி செய்ய 80 ஏக்கருக்கு ஒரு ஆழ் துளை கிணறு மட்டுமே போதும்.
நம்மாழ்வார் & கோ மீதேன் உற்பத்தி செய்த பின் விளை நிலங்களை தோண்டி நிலக்கரி எடுப்பார்கள் என்று சொன்னார். நிலக்கரி அதிக ஆழத்தில் இருப்பதால் அதை தோண்டி எடுக்க முடியாது.
மீதேன் உற்பத்தியின் போது/ மீதேன் உற்பத்திக்கு பின் நிலக்கரியில் கரிமில (CO2) வாயுவை சேமித்து Global warming யை குறைக்கும் technology - ECBM (Enhanced CBM Recovery) & Carbon Sequestration.
நிலக்கரி மீதேனை விட 2 -10 மடங்கு CO2 வை adsorb செய்யும். அதாவது ஒரு பங்கு மீதேனை உற்பத்தி செயதால் அந்த இடத்தில் 10 பங்கு வரை CO2 வை சேமிக்கலாம். இதன் மூலம் புவி வெப்பமயமாவதை தடுக்கலாம்
நிலக்கரியில் Methanogenic Bacteria முலம் மீதேனை உருவாக்கலாம்.
CO2 + 4 H2 → CH4 + 2 H2O
இதற்கான ஆராய்ச்சி IIT & NEERI யில் நடை பெறுகிறது. Field trial ஜார்கன்ட்யில் உள்ள CBM கிணறுகளில் நடைபெற்றுவருகிறது. Methanogenic Bacteria are non-pathogen இவை நோய்களை உருவாக்காது
Environmental activism அறிவியலை அடிப்படையா கொண்டு இயங்கினால அது சமுகத்திற்கு நன்மை பயக்கும். இங்கு நம்மாழ்வார் சொல்கிறார், சீமான் சொல்கிறார் ன்னு மூளையை மூலையில் வைத்துவிட்டு குருட்டுத்தனமாக மாட்டு மந்தை தனமாக எதிப்பது சமுக வளர்ச்சியை பதிக்கும்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to நீட் துரோகி EPS&OPS
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!