Profile picture
Wolfrik @wolf_twits
, 23 tweets, 4 min read Read on Twitter
ஒரு பொறியாளனின் புலம்பல் அப்படியே அவரின் வார்த்தைகளில் :

Middle class engineers ன் வாழ்க்கையும் அரசாலும் அரசியல் வியாதிகளாலும் அவர்கள் படும் அவதியும்.

2005 ஆம் ஆண்டு வரை Engineering படிப்பு என்பது பல மாணவர்களுக்கு கனவு தான் ஏன்னா engineering படிக்கணுன்னா entrance எழுதணும்
திறமை அடிப்படையிலே சீட் கிடைக்கும் இதை பார்த்த நமது அப்போதைய தமிழ்நாடு அரசு அதாவது நம்ம கலைஞர் முதல்வராக இருந்தபோது பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு எட்டா கனியாக இருக்கக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல 2006ல் entrance exam cancel பண்ணங்க திட்டம் நல்ல திட்டம் தான் ஆனா நாளடைவில்
அதுவே சனியனாக வந்து விடிந்தது. ஏன்னா பொறியியல் கல்லூரிகள் பற்றாக்குறை காரணமாக புதிய தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது இன்னும் அளிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
சரி எல்லாம் நல்ல விஷயம் தானே ன்னு பாத்தா அவன் அவன் லஞ்சம் கொடுத்து தகுதியே இல்லாத கல்லூரிகளுக்கும்
அனுமதி அளித்தது. அதுனால வந்த வினை தான் இப்போ 650 கல்லூரிகள் அண்ணா பல்கலைகலத்தின் கீழ் மட்டும் 563 கல்லூரிகள் இருக்கு ஆனா இப்போல்லாம் அங்க படிகத்தான் ஆள் இல்லை இதுல எங்க ஊர் பக்கம் ஒவ்வொரு கல்வி ஆண்டு ஆரம்பிக்கும்போது 2 பேருந்துகள் கேரளா நோக்கி படையெடுக்கும் வேற எதுக்கும் இல்ல
புள்ள புடிக்க தான்.இதுல கொடுமை என்னன்னா படிச்சுட்டு வெளிய வர்றவன்வன்ல கொஞ்ச பேர் அதே கல்லூரில் professor ஆ இருப்பான் அதுவும் ME படித்துக்கொண்டே. என்றாவது ஒருநாள் வரும் inspection க்கு மட்டும் எங்க இருந்து தான் ஆள புடிப்பங்களோ தெரியாது correct ஆ escape ஆகிடுவானுங்க.
Middle classல பொதுவா ஒரு கூட்டம் இருக்கும் நம்ம 12த் பாஸ் ஆனது அவிங்களுக்கு எப்படித்தான் தெரியுமோ சரியான நேரத்துல வந்து நம்ம வாழ்க்கைல take diversion போர்ட் போட்டு நம்ம என்ன படிக்கணும் எங்க படிக்கணும்னு வரைக்கும் அவனுங்களே நம்ம வாழ்க்கை என்னும் கல்வெட்டில் செதுக்கி வச்சுட்டு
போயிருவானுங்க(சில குடும்பங்களுக்கு மட்டும் இது பொருந்தும். கொஞ்ச பேர் கொலுப்பெடுத்து போயும் இங்க வந்து விழுவானுங்க).

சரின்னு சகிச்சுக்கிட்டு நாமளும் அந்த காலேஜ்க்கு போவோம் போன முதல் நாளே வாழ்க்கை வெறுக்குற அளவுக்கு பாடம் எடுப்பனுங்க அதுலயும் தமிழ் மீடியம் பசங்க செத்தானுங்க நம்ம
வந்து செந்த இடம் கல்லூரியா இல்ல கல்லறையானு தெரியுறதுக்குள்ள 1 வருஷம் ஓடிரும். வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யும் ன்னு சொல்ற மாதிரி அப்போ அப்போ அரியர்களும் வந்து போகும் சில பேருக்கு ஒருமுறை வந்த அறியர் போகவே போகாது அது காலேஜ் முடிச்சாலும் கூடவே வரும்.
இப்போதைக்கு ஒரு வருஷத்துக்கு 1.57 lakh engineers வெளிய வராங்க அதுல 48,139 arrears கூடவே கூட்டிட்டு வர்றான்னுங்க அதுக்காக அவனுங்க எல்லாம் முட்டா பயலுங்க கிடையாது இப்போ arrear வசவன் தான் சீக்கிரம் செட்டில் ஆகுறான் அது வேற கதை. So இப்போ பாஸ் ஆகி
வெளிய வர்ற 1,08,861 பேர் ல 52,000 பேர் ITBPO வேலைக்கு போராணுங்க அதுல ஒரு 8% மக்களுக்கு மட்டுமே 25,000 ரூபாய் மாத சம்பளம் இருக்கும் அதுலயும் இப்போ மண்ண அள்ளி போடுற மாதிரி 2ல் இருந்து 10 வருடம் அனுபவமுள்ள பணியாளர்கள் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டு
நீக்கபடுகிறார்கள் ஏன் என்று கேட்டால் அந்த கம்பெனிக்கே பதில் தெரியாது அதுலயும் ஒன்னு ரெண்டு பேர் எஸ்கேப் ஆகிடுவானுங்க ஏன்னா அவனுக்கு own program பண்ண தெரிஞ்சுருக்கும். சரி மீதி உள்ள 50,000 பேர் என்ன பண்ணுவானுங்கன்னா 50% பேர் வெளிநாட்டுக்கு ஓடுறான் பாதி பேர் ஏதாவது core கம்பெனி ல
மாதம் 7k லிருந்து 12k சம்பளத்துக்கு வேலைக்கு போறான் ஒரு 10% மாணவர்கள் அரசு வேலைக்கு போக prepare பண்ணிட்டு இருப்பான் 10% சொந்தமா business பண்ணுவான் மீதி இருக்குற 30% பேர் நம்ம எல்லாருக்கும் advice பண்ணிட்டு இருப்பனுங்க(VIP).

மீதி இருக்குறது arrear வச்சுருக்குறவனுங்க இவனுங்க
என்ன பண்ணுவானுங்கன்னு யாருக்கும் தெரியாது பாதி பேர் திடீர்ன்னு பெரிய ஆளா இருப்பனுங்க மீதி பேர் தடம் தெரியாம போயிருவானுங்க இதெல்லாம் ஒரு வருஷ கணக்கு தான்.

இப்படி நம்ம ஆளுங்க நாம என்ன பண்ணப்போறோம்ன்னு முடிவு பண்றதுக்கே ஒரு வருஷம் ஆகிடும் இந்த ஒரு வருஷம் முடியும்போது நமக்கு
ஒரு ph வரும் யாருன்னு கேட்டா சனி பகவான் அப்போ தான் கண்திறந்து bank manager உருவத்துல தம்பி education loan கட்ட அரம்பிங்க அதுக்கான காலம் வந்தாச்சுன்னு சொல்லுவான். நாமளும் அரக்க பறக்க ஓடி போய் எவளோ கட்டணும்ன்னு கேட்ட பதிலுக்கு அவன் குடுப்பனே ஒரு பதில் அதுலயே பாதி பேர் அதிர்ச்சில
செதுருவான் அப்டி என்ன சொல்லுவான் ன்னு கேட்ட sir நீங்க எடுத்த loan 2 லட்சம் கூடவே வட்டியும் 11.7% சேத்து பாத்தா 4 லட்சத்து 8 ஆயிரம் ஓவா நீங்க மாத தவனையா 7k கட்டுனா போதும்னு சொல்லுவான் நமக்கும் என்ன பு***** க்குன்னு கேக்க தோணும் ஆனா கேக்க முடியாது ஏன்னா நம்ம கல்லூரி
படிப்பு முடிச்சு வெளிய வரும்போதே சூடு சொரணை இந்த மாதிரியான items நம்மள விட்டு போயிருக்கும் சரி இந்த வட்டி தள்ளுபடி கல்வி கடன் தள்ளுபடின்னு சொன்னங்களே அப்டி ஏதாவது நடக்குமானு manager கிட்ட கேட்ட state gov க்கும் educational loan க்கும் ஒரு சீமந்தமும் இல்லன்னு
ஒரு குண்ட தூக்கி போடுவான் sir 2014 ல central minister ப.சிதம்பரம் கூட வட்டி தள்ளுபடின்ன்னு சொன்னாரே நீங்க கூட அதுக்கு ஒரு application எழுதி குடுக்க சொன்னீங்க நானும் குடுத்தானே sir ன்னு நானும் கேக்க அவரோ அது பத்தி இதுவரை எந்த g.o வும் வரவில்லை தம்பினு கருவருத்துட்டாரு.
அப்புறம் தான் இந்த 10% gov exam க்கு படிக்கிறவன் சும்மா இருக்குற 30% arrear வசுருக்குறவன் எல்லாம் வேல தேடி ஓட ஆரம்பிப்பான் அங்க போய் interview ன்னு ஒன்னு வைப்பனுங்க அங்க அவிங்க கேக்குற கேள்வி இருக்கே யப்பா ஒரு வருஷமா எங்க ஊ*** போனான்னு கேக்குற மாதிரி இருக்கும்.
நம்ம கெரகம் நம்மளோட படிச்ச மூத்தவி வேல பாக்குற இடத்துக்கே நாமளும் இன்டெர்வியூ போவோம் நம்ம போற நேரத்துல அவன வேலைய விட்டு தூக்க பூரா பயலும் ஒண்ணா வேலை தேடி அலைவோம் வேலையும் கிடைக்கும் சம்பளம் மட்டும் நான் முன்னால சொன்ன மாதிரி 7k to 12k தான் அதுல அவனுங்க கேக்குற 7k ஓவாவை 5 எப்படி
மச்சான் வருசமா கட்ட முடியும் தங்கச்சிக்கு வேற வயசாகுது கல்யாணம் பண்ணனும் ன்னு நண்பனோ நம்ம மூஞ்சிய பாப்பான்.

அப்போ தான் நம்ம ரத்தம் கொதிக்கும் கார் வாங்க 9%வட்டி, business பண்ண 7% (approving by district industrial centre) ங்*** personl லோன் க்கு கூட 12% தான் வட்டி ஆனா வட்டி இல்ல
வட்டி இல்லன்னு சொன்ன education lone க்கு 11.7% வட்டின்னு கோவதுல கேஸ் போட தோணும் ஆன நம்ம தான் மிடில் கிளாஸ் ஆச்சே அதுவும் முடியாது, போகுது கழுதன்னு கட்ட ஆரம்பிப்போம்.

ஆகமொத்ததுல நான் இப்போ என்ன சொல்ல வர்றேன்னா நாம தான் நாசமா போயாச்சு இனி நம்ம பின்னால் வர்ற சந்ததிகளுக்காவது தரமான
engineering படிப்பை கொடுப்போம் தரமற்ற கலோரிகளை பூட்டு போட்டு கல்வி கடனில் ஒரு வரையறை கொண்டு வர இந்த ஜல்லிகட்டுக்கு பொங்குன மாதிரி பொங்குவோம். கல்வி கடன் தள்ளுபடி வட்டி தள்ளுபடின்னு யாவனது ஓட்டு கேட்டு வந்தா செருப்பால அடிப்போம்.
ஆனாலும் மாட்டுக்கு சேந்த நாம மனுஷனுக்கு சேர மாட்டோமே ஏன்னா நம்ம டிசைன் அப்புடி ஒரு மயிரையும் புடுங்க முடியாது.

#Save_engineers

(தம்பியின் வலிமிகு வார்த்தைகளை படிக்கையில் நெஞ்சம் கணப்பது நிஜமே.)
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Wolfrik
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!