அப்படி என்ன செய்தார் மனிதர்?
தன் வாழ் நாளெல்லாம் சம்பாதித்த பணத்தை 5 ஆயிரம் கோடியினை தானமாக கொடுத்துவிட்டார்
மனிதர் சொல்வது இதுதான்!
என் உணவுக்கும் செலவுக்கும் பணமிருக்கின்றது, முடிந்துவிட்டால் கேமரா முன் நின்றால் போதும்
ஆச்சரியமான மனிதர் இவர்
பொதுவாக சீனர்களின் வழக்கம் வித்தியாசமானது,ஒருவர் இறந்து விண்ணகம் சென்றால் சுடுகாட்டில் அவரின் உடைகள் மற்றும் பொருட்கள் சிலவற்றை எரிப்பார்கள்,
சிலர் காரையே எரித்த கதை எல்லாம் உண்டு,ஆம் மூட நம்பிக்கை அப்படி உண்டு.
அப்படிபட்ட சீனர்கள்,ஒருவர் இறந்தால் பணத்தையும் எரிப்பார்கள்,அப்பணம் மேலோகம் செல்லுமாம்
இப்பொழுது பணத்திற்கு பதிலாக வெறும் காகிதம் எரிக்கின்றார்கள்,
கம்யூனிசம் அவர்களின் ஆட்சி கோட்பாடே அன்றி,அவர்களின் மூட நம்பிக்கை இன்னும் அப்படியே இருக்கின்றது.
அப்படிபட்ட சீன இனத்தில் இருந்து வந்து,செத்தபின்னும் எரித்து கொண்டு செல்லும் குலத்தில் இருந்து வந்து
அது என்னவோ தெரியவில்லை சீன நடிகர்கள் மிக கஷ்டபட்டு சண்டை இடுகின்றார்கள்,ஆனால் அந்த பணத்தினை அள்ளி கொடுக்கின்றார்கள்
ஜாக்கிசானும் நிரம்ப கொடுத்துவிட்டார்,தன் மகனுக்கு சல்லி பைசாவும் சேர்த்து வைக்கவில்லை
ஆனால் தமிழக நடிகர்கள் மிக சுகமாக நடித்து வந்துவிட்டு, நடிகைகள் இடுப்பை சுற்றி ஆடி சம்பாதித்துவிட்டு சல்லிகாசு கொடுப்பதில்லை
சீன சண்டை நடிகர்களுக்கு தன்னம்பிக்கையும் பொது நல சிந்தனையும் அதிகம் போலும்
இந்த Chow Yun Fat கொண்டாடபடும் பொழுது, அவரின் மனைவியும் கொண்டாடபடுகின்றார்,
எப்படிபட்ட அபூர்வ மனைவி?
மனிதர் எல்லா வகையிலும் ஆசிபெற்றவர் போல, அதனால்தான் அள்ளி அள்ளி கொடுக்கின்றார் .