அச்சு & டிவி ஊடகங்களிலும் கூட திமுக கூட்டணி தான் முன்னிலை என்பது போன்ற ஒரு பிம்பம் காட்டப்படுகிறது.
இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல.. முந்தைய 3 தேர்தல்களிலும் கூட இப்படி ஒரு மாயை தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால்.. முடிவுகள் என்ன?!
#என்கணிப்பு
எதனால் இப்படி?!
பல ஊடகங்கள் ஓருபக்கச்சார்போடு கணிப்புகளை வெளியிட்டன!
சில ஊடகங்கள் திமுகவால் கையகப்படுத்தப்பட்டு காலடியில் கிடந்தன.
உண்மையில் இவைகள் கருணாநிதியை நம்ப வைத்து ஆசைகாட்டி ஏமாற்றி வந்தன!
#என்கணிப்பு
அதிமுக எப்படி தொடர்ந்து வெற்றிக்கனியை பறிக்கிறது?!
உண்மையில்..
அதிமுகவின் பலம் என்பது தனிக்குணம் வாய்ந்த ஒரு பலம் வாய்ந்த வாக்கு வங்கி தான்.
அது எப்போதுமே அராஜகம், அத்துமீறல்களை செய்யும் கட்சியினரை வெறுக்கும்.
#என்கணிப்பு
வெளி உலகோடு அதிகம் பேசாது. தனது அடிவயிற்றில் கை வைக்காத வரையில் பெரியளவில் பொங்கி எழாது.
அது டிவி கிரைண்டர் போன்ற தமது அடுத்த மேலடுக்கு பொருளுக்கு ஆசைப்படும்.
விலையில்லா அரிசியை வரவேற்கும்.
#என்கணிப்பு
மிகைப்படுத்திய புரட்சி கூவல்களை இடது கையால் ஒதுக்கிவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய்விடும்.
தமிழக வாக்காளர்களில் சுமார் 25% கொள்ளளவு உள்ளது இந்த வாக்கு வங்கி.
#என்கணிப்பு
இந்த வாக்கு வங்கி எம்ஜியாருக்குப் பின் ஜெயலலிதாவை நம்பியது.
தற்போது இந்த வாக்கு வங்கி ஈபிஸ் & ஓபிஎஸ் கூட்டணி முன்னெடுத்துச் செல்லும் அதிமுகவை நம்புமா?! என்பது தான் இப்போதுள்ள முக்கிய கேள்வி.
#என்கணிப்பு
அதிமுக கூட்டணியானது கௌரவமான வெற்றிகளைப் பெறும்.
3/4 என்ற அளவிலோ.. அதற்கும் மேலாகவோ இருக்கும்.
#என்கணிப்பு
இது சரியான விதத்தில் தொகுக்கப்பட்டு, குறைந்தபட்சம் ஒரு 5% என்ற அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட்டால்..
அது தமிழக அரசியலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழக அரசியல் சித்தாந்தங்களை புரட்டிப்போடும்.
#என்கணிப்பு
முடியும்.
அது எப்படி?!
*தூத்துக்குடியில் தமிழிசை வென்றால்..
*பாஜக 5 தொகுதிகளிலும் வென்றால்..
*அதிமுக கூட்டணி 40/40 என்று வென்றால்..
*திருமாவளவன் படுதோல்வி அடைந்தால்..
#என்கணிப்பு
இவை எல்லாம் யூகமான கணிப்புகள் மட்டுமே!
ஆனால், நிஜமான தீர்ப்பு தமிழக வாக்காளர்களின் கையில் உள்ளது.
தீர்ப்பு/முடிவுகள் வெளிவரும் நாளுக்காக காத்திருப்போம்.
🙏
#என்கணிப்பு