#Thread
இந்து தமிழ் திசை பத்திரிகையில் ஸ்டாலின் பிரச்சாரம் குறித்து இன்றும், தினகரன் பிரச்சாரம் குறித்து இரு தினங்களுக்கு முன்பும் வெளியான இரு கட்டுரைகளயும் படித்தேன்.
தினகரன் கட்டுரையில் அவரது பேச்சு பாணி குறித்த எந்த விமர்சனமும் இல்லை. ஒருவேளை கட்டுரையாளருக்கோ, ஆசிரியர் குழுவுக்கோ அது பிடித்தமான பாணியாக இருக்கலாம். சீரிசையான தமிழில், மேடைப்பேச்சாக பேசுவது இன்றைய ட்ரெண்ட் அல்ல என்கிற முன்முடிவு இரண்டு கட்டுரைகளிலும் தெரிகிறது.
ஸ்டாலின் உருவாக்கிக்கொண்ட பேச்சு பாணிக்கு என வரலாற்றின் ஆகச்சிறப்பான மரபு இருக்கிறது. திராவிட பேச்சு மரபு.
தினகரனால் சீரான மேடைத்தமிழில் ஏன் பேசமுடியவில்லை? சீரான மேடைத்தமிழை பேசினால் அரசியல் மேடையில் அரைக்கால் டவுசர் பள்ளிச்சிறுவன் போல் தோற்றம் தருவோம் என்ற பயம் தானே காரணம்?
(வேட்பாளரின் பணபலம் இதற்கு காரணமாக இருக்கலாம்)
கூட்டத்துக்கு வருவது கட்சிக்காரர்கள் மட்டும் தான் என்றால், அது 100% ஓட்டாக மாறும். இல்லை, கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற சந்தேகம் இருந்தால், கூட்டத்திற்கு பொதுமக்கள் அதிகம் வருகிறார்கள் என ஒத்துக்கொள்ளுங்கள். பிறகு சந்தேகம் எழுப்பலாம்.
ஆனால், 50 ஆண்டு உழைப்புக்குப் பிறகும், ஸ்டாலினை குடும்ப அரசியல் விமர்சனம் விடவில்லை என்கிற குத்தல், பார்ப்பனிய பிரச்சார குத்தல் !
பதில் எளிமையானது. தினகரன் கட்சி யாருக்கானது என மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. கட்டுரைக்குத் தெரியவில்லை !
google.com/amp/s/tamil.th…
ஸ்டாலின் குறித்த கட்டுரை:
tamil.thehindu.com/opinion/column…