ஒரு தலைவன்
மக்கள் பிரச்னையை புரிஞ்சுகிட்டு
ஒன்னு கூட சேந்து குரல் கொடுக்கணும்
இல்ல இது தப்புனு வழி நடத்தணும்
ஆனா ஊனா போராடாத பேசாதனு மக்களையே குறை சொல்றது என்ன நியாயம் ?
எதுவும் கிடையாது
ஆனா முதல்வர் ஆகனும்னு ஆசை மட்டும்
நல்ல காரியங்கள் மக்களுக்கு போகுது
அது மட்டுமே உங்களுக்கு ஒட்டு வாங்கி ஆகாது
அப்படிலாம் கணக்கு வச்சா விஜய் சூர்யா அஜித்
ஏன் கருணாஸ் மயிலசாமி கூட முதல்வர் ஆகலாம் பலரும் உதவி செய்றவங்க தான்
உங்க கொள்கை என்னனு தெளிவு படுத்துங்க
இல்ல மக்கள் கருத்தோட ஒத்து போயிருக்கோமா ?
அப்படி இருக்கணும்னு அவசியம் இல்ல
ஒரு ஆப்போசிட் ஸ்டாண்ட் எடுக்கறோம் அப்படினா கூட
அது என்னனு விளக்க வேண்டியது ஒரு தலைவரா உங்க கடமை இல்லையா?
இது யாருக்கும் பாதிப்பு இல்லனு விளக்கம் கொடுக்கிறார்
உங்க நிலைப்பாடு என்னனு கேட்டா
அதுக்கு ஏன் இவளோ மவுனம்?
வேற யாரோ இல்ல
இது மத சம்மந்தம் பட்ட issue,
அங்க கோஷம் எழுப்பரவன் எல்லாம் எல்லாம் மதமும் கலந்தவங்க
அதுலயே மக்கள் ஒற்றுமை உங்க கண்னுக்கு படலயா?
நியாயப்படி அரசு அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்துருக்கணும்
கொடுக்கல அதான் அவன் எதிர்க்குறான் கேக்குறான்
மக்களுக்குக்காக பேச வேண்டிய Representatives in Lok/Rajya sabha சொதப்புறாங்க
இது un-constitutional nu தெரியும்போது விஷயம் தெரிஞ்சவன் எதிர்க்குறான்
ஒரு முறை தான் இப்படினு பாத்தா
இது பல முறை நடந்த கூத்து
மக்கள் ஒரு பக்கம் இருக்க
நீங்க நேர் மாறா ஆளும் ஆட்களுக்கு ஆதரவா தான் இருக்கீங்க
நிலம் கையகம் அப்ப அரசுக்கு ஆதரவான பேச்சு
இப்ப கூட ஏதோ வன்முறை செய்யவும் கலவரம் செய்யவும் தன மக்கள் இருக்கிற மாத்தி பேச்சு
ஆழ்பவர்கள் எதிர்த்து கேள்வி கேக்கவே கூடாதுனு முடிவு பண்ணிட்டிங்களா?
96 கதை லாம் கடந்த காலம் தான் போல
மக்கள் Representatives சொதப்பிட்டாங்க
அரசு தரும் விளக்கங்கள் நம்பக தன்மை இல்ல
வேற எப்படி மக்கள் அவங்க உரிமைய மீட்டு எடுக்கிறது?
அதுக்கு ஏதாச்சும் வழி இருக்கா ?
போராட்டம் தவிர வேற ஒன்னு இருக்கிறதா தெரியலையே?
அதையும் செஞ்சா
அமைதியா போராட்டம் பன்னா
நம்ம சமூக விரோதிஸ் கலவர பூமிஸ் ஆகிடறாங்க
வேற என்ன வழி தலைவா?
அமைதியா சொல்றத கேட்டுனு போய்டுறணுமா?
இது பாசிசத்தோட அறிகுறியா தெரியலையா?
எதுக்கு போராடுறானு சொல்ல ஏன் முடியல?
எதார்த்தத்துக்கு வாங்க தலைவா ஒன்னு
வெளிப்படையா ஆதரிக்கிறேன்னு சொல்லுங்க
இலை எதிர்க்கிறேன்னு சொல்லுங்க
ஒரு மக்கள் பிரச்சனை
அதிமுக - ஆதரவு பிரச்சனை இல்லை
பாமக - கூட்டணி தர்மம்
திமுக - எதிர்ப்பு , போராடுவோம்
மதிமுக - எதிர்ப்பு
மையம் - எதிர்ப்பு
ஆமை கரி சீமான் கூட ஒரு நிலைப்பாடு வச்சிருக்கான்
உங்க நிலைப்பாடு? - சுத்தமா தெரில புரியல
பல ரசிகர்களுக்கு இது கோவத்தை வர கூடிய Thread ah இருக்கலாம்
ஒரு தெளிவு வெளிப்படைத்தனம்
அரசியல்க்கு தேவை
முக்கியமா மக்களோட ஆதரவு
நான் அரசியல் சாணக்கியன் லாம் கெடையாது
சராசரி ரசிகன் எனக்கு தெரிஞ்சத சொல்றேன்
மக்களோட குரல்
ஒருமித்த குரல் தான்
உண்மையான அதிசயம் அற்புதம்
ஏற்கனவே பல அதிசயம் நிகழ்த்தியதும் அது தன மக்கள் குரல் "போராட்டம்"
உங்களால உங்க நிலைப்பாட்டை சொல்ல முடியல பரவாயில்ல
மக்களோட உணர்வை கொச்சை படுத்தாதிங்க
இல்லாத ஒரு விஷயம் உங்ககிட்ட இருக்கு
அது தான் நல்ல மனுஷன்ங்கிற பேரு
மாற்றத்தை மக்கள் எதிர்பாக்குறாங்க
அது அவங்களுக்கு பயன் இல்லாத மாற்றம் னு முடிவு பண்ணிட்டா? வச்சு செய்வாங்க
-
நல்லதே நடக்கும்
கூட கொஞ்சம் மக்கள் தேவை
என்னனு செவி சாய்ப்போம்
- a disappointed fan.